சசிகுமார் கொலை வழக்கு: கைதானவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், முபாரக், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை: சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், முபாரக், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை சுப்பிரமணியபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், கொலை தொடர்பாக முபாரக், சதாம், சுபேர் ஆகியோரையும் இவர்களுக்கு உதவியதாக அபுதாகீர் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கனி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்த கொலையில் அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை தேசிய பாதுகாப்பு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், முபாரக்,சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



அபுதாகீர், சுபேர் ஆகியோரின் வீடுகளில் இருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். முபாரக்,சதாம் ஆகியோரது வீடுகளில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...