"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். ராஜினாமா செய்ய வேண்டும்"

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி வலியுறுத்திள்ளார்.


கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி வலியுறுத்திள்ளார். 

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிச்சாமி கோவையில் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கட்சி ஒப்புதல் இல்லாமல் பேட்டியளித்த வேணுகோபால் எம்.பி.யை எப்போது கட்சியை விட்டு நீக்கம் செய்யப்போகின்றனர். பா.ஜ.க.விற்கு எதிராக பேசினால் அ.தி.மு.க.,வை விட்டு ஏன் நீக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமானால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.விற்கு எதிராக அ.தி.மு.க. வாக்களிக்க வேண்டும். 

இரு அணிகள் இணைந்த பின்னர் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், ஏன் இதுவரை உயர்மட்ட குழு அமைக்கப்படவில்லை. அ.தி.மு.க., சட்டவிதி திருத்தம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டுள்ளேன். அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் சட்ட விதிகள் பரீசிலனையில் இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அ.தி.மு.க. சட்டவிதி திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. இரட்டை தலைமைகள் என்பது அ.தி.மு.க.,விற்கு சரியாக இருக்காது. அ.தி.மு.க.,விற்கு ஒற்றை தலைமை தேவைப்படுகிறது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரிடம் வரவு செலவு சரியாக இருக்கின்றது. அவர்கள் இருவரின் சுயநலத்திற்காக கட்சியை பலியிடக் கூடாது. அவர்கள் இருவரிடையே என்ன வரவு செலவு இருந்தது. 

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் இருவரும் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றக்கூடாது. நான் வேறு அணிக்கோ, வேறு கட்சிக்கோ செல்லப்போவதில்லை. 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் அரசியலில் ஈடுபடாமல் முழுமையாக ஒதுங்கி விடுகின்றேன். பா.ஜ.க.வில் இருந்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரையும் அழைத்து மிரட்டப்பட்டது. அதன் காரணமாகவே, தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க., சட்டவிதியில் திருத்தங்களை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு செய்த போது ஏன் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 

அணிகள் இணைந்த பின்பு கட்சி நிர்வாகிகளிடம் எதுவும் இவர்கள் விவாதிப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என சொல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க., ஒன்றும் பண்ணையில்லை. நான் என்ன உள்நோக்கத்துடன் பேசினேன் என்பதை அமைச்சர் ஜெயக்குமார் விளக்க வேண்டும். நான் எப்போதும் அ.தி.மு.க.காரன்தான் வேறு எங்கும் போகமாட்டேன். 

ஒ.பி.எஸ். தனி அணியாக இருந்த வரை மக்களிடம் வரவேற்பு இருந்தது. அணிகள் இணைந்த பின்னர் மக்களிடம் கட்சிக்கு வரவேற்பு இல்லை. அ.தி.மு.க., பா.ஜ.க.வின் கைப்பாவையாகி விட்டது. இந்த ஆட்சியை கடைசி வரைக்கும் ஓட்டி, தங்களை வளப்படுத்தி செட்டில் ஆகவே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் பார்க்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அ.தி.மு.க., ஏன் இதுவரை நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அ.தி.மு.க., தன் நிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரம் இது. 

அ.தி.மு.க.,வில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் கூட எல்லை மீறி பேசுகின்றனர், அடித்துக்கொள்கின்றனர். வேணுகோபால் எம்.பி. கட்சி சொல்லாமல் கருத்து சொல்கின்றார். அவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுப்பதில்லை. காவிரி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததைப்போல ஓ.பி.எஸ். இ.பி.எஸ். சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடியுமா..? 

எச்.ராஜா, சுப்பிரமணியசாமி போன்றோர் கட்சியையும், அ.தி.மு.க.,வினரையும் இழிவாக பேசுகின்றனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சசிகலா கூட இணைந்து விடுவதற்கான முயற்சியாக கூட இருக்கலாம். டெல்லி உத்தரவினை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் இருந்து நீக்கி இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மீது தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல் வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான தகவல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால், அவர் கடைசி வரை கொடுக்கவில்லை. கடைசியில் விவாத நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இடையே எந்த மோதலும் கிடையாது. அவர்கள் தங்கள் ஆதரவாளர்களை தக்க வைக்க முயல்கின்றனர். பல சீனியர்கள் தங்கள் நிலையை விட்டுக் கொடுத்துள்ளனர். சீனியர்களின் உழைப்பு, தியாகத்தால் எடப்பாடி பழனிசாமியை தலைவராக உருவாக்கி இருக்கின்றனர். ஓ.பன்னீர் செல்வம் மோடி சொல்லியதன் பேரில் இணைந்தேன் என்கின்றார். சசிகலா ராஜினாமா கடிதம் கேட்டதால் கொடுத்தேன் என்கின்றார். ஒ.பி.எஸ். அவர்களுக்கு சொந்த அறிவோ இல்லையா..?. இவ்வாறு கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...