பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகளின் பந்தயத்தால் பலியான சிறுமி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்ற போது, எதிரில் வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது மோதியதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்ற போது, எதிரில் வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது மோதியதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை அடுத்த புதுக்காடு பகுதிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அங்கலகுறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது பழநியில் இருந்து வால்பாறைக்கு சென்ற அரசு பேருந்துடன் போட்டி போட்டு சென்று உள்ளது. 

ஆழியாறு ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த புதுக்காடு செல்லும் பேருந்து வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் அட்டக்கட்டியை சேர்ந்த மோனிகா (14) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



மேலும், வால்பாறையை சேர்ந்த கல்லூரி மாணவன் கார்த்தி (19), சிங்காரவேல் (40), வெங்கடேசன் (18), புருஷோத்தமன் (19) மற்றும் முனியாண்டி (32) ஆகியோர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆழியார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...