உந்துசக்தி குறைவால் 4 மணிநேரம் மலை ரயில் தாமதம் : பயணிகள் அவதி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயில், உந்துசக்தி குறைவு காரணமாக 4 மணிநேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயில், உந்துசக்தி குறைவு காரணமாக 4 மணிநேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.



மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலை ரயிலில் அடிக்கடி உந்துசக்தி குறைவு ஏற்படுவதால் மலைப்பாதையில் மெதுவாக ஊர்ந்து வரும் நிலை ஏற்படுகிறது. கடந்து சில நாட்களாக இப்பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலைப்பாதையில் பல இடங்களில் நின்று வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்து கொண்டிருந்த மலை ரயில், உந்துசக்தி முழுவதும் குறைந்ததால் ஹில்குரோவ் அருகே நடுக்காட்டில் நின்றது. இதனால், சுற்றுலாப் பயணிகள் சற்று சிரமப்பட்டனர். ரயில்வே ஊழியர்கள் பழுதை சீரமைத்தபின் 4 மணிநேரம் தாமதமாக மலை ரயில் குன்னூர் வந்து சேர்ந்தது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...