விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை வெளியேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர், இதனால், விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல், சிறுமப்பட்டு வருவதாகக் கூறி அனைத்து விவசாயிகள் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உழவர் சந்தையில் செயல்பட்டு வரும் காய்கறிகள் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கை தனி நபருக்கு வாடகைக்கு விட்டதைக் கண்டித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...