17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெள்ளலூர் - இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் ஜெகநாதன் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குற்றவாளி ஜெகநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அபராதமும், இழப்பீடும் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.