கோவை மாநகராட்சிக்குட்பட்ட வரிவசூல் மையங்கள் இந்த மாத இறுதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட வரிவசூல் மையங்கள் இந்த மாத இறுதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநகாட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு (2017-18-ம்) நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்கு மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரி வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களின் நலன் கருதி, மார்ச் 31 வரையுள்ள அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் வழக்கம் போல் செயல்படும்.
எனவே, இந்த வசதியினை முழுமையாகப் பயன்படுத்தி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும், குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.