கோவையில் இடி தாக்கியதில் பெண் பலி

கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் உள்ள திருமாலையம்பாளையத்தில் சித்ரா என்ற பெண்ணின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் உள்ள திருமாலையம்பாளையத்தில் சித்ரா என்ற பெண்ணின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. மதுக்கரையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. 

இந்த நிலையில், திருமாலையாயம்பாளையம் ரொட்டி கவுண்டன் புதூர் கிராமைத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமியின் மனைவி சித்ரா(38) நேற்று இரவு சுமார் 7:30 மணி அளவில் தோட்டம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தார். 



அப்போது தோட்டத்தில் இடி விழுந்தது. இந்த விபத்தில் சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த க.க.சாவடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

இடி விழுந்ததில் பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...