தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபை வரவேற்பு

2018-2019-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு கோவையைச் சேர்ந்த இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபை மற்றும் இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை : 2018-2019-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு கோவையைச் சேர்ந்த இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபை மற்றும் இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

தமிழக சட்டப்பேரவையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில், அத்திக்கடவு- அவினாசி குடிநீர் திட்டம், உயர்கல்வித்துறை, போக்குவரத்து, அம்ருத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபையின் தலைவர் வனிதா மோகன், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் நிதிப்பற்றாக்குறை 4.12 சதவீதத்தில் இருந்து 2.82 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில், அரசுக்கு வரும் வருவாயிக்கும் அதிகமாக ரூ. 17,490 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதேபோல, தமிழக அரசின் பட்ஜெட்டை இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மண்டலமும் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அதன் தலைவர் எம். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலத்தில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. 2017-18-ல் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 08.03 சதவீதமாக உள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டின் மூலம், 2018-19-ம் ஆண்டில் 9 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

இதேபோல, இந்திய தொழில் கூட்டமைப்பின் துணை தலைவர் ஆர். வரதராஜன் கூறுகையில், தமிழக அரசு தனது பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நெல் மற்றும் கரும்பு ஆகியவற்றின் அடிப்படை விலை நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், பருப்பு வகைகளிலும் அடிப்படை விலை நியமிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் ஓரளவிற்கு லாபம் பார்க்க முடியும். இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...