மெட்ராஸ் சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையிலான 'புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸ்' ஒரு பார்வை

சுமார் 89 ஆண்டுகளுக்கு முன்னதாக, மெட்ராஸில் (சென்னை) இருந்து மேட்டுப்பாளையத்திற்கு முதல்முறையாக ரயில்சேவையை தெற்கு ரயில்வே வழங்கியது. 1929, மார்ச் 15-ம் தேதி புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸ் மற்றும் நீலகிரி எக்ஸ்பிரஸ் எனப்படும் ரயில் இயக்கப்பட்டது. மெட்ராஸ் சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் இயக்கப்பட்ட புகழ்பெற்ற இந்த ரயிலில் முதல்முறையாக முதல்வகுப்பு பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, 1908 முதல் 1929-ம் ஆண்டு வரைக்கும் மெட்ராஸ் சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே 'மேட்டுப்பாளையம் மெயில்' என்ற ரயில்சேவை வழங்கப்பட்டு வந்தது.

கோவை : சுமார் 89 ஆண்டுகளுக்கு முன்னதாக, மெட்ராஸில் (சென்னை) இருந்து மேட்டுப்பாளையத்திற்கு முதல்முறையாக ரயில்சேவையை தெற்கு ரயில்வே வழங்கியது. 1929, மார்ச் 15-ம் தேதி புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸ் மற்றும் நீலகிரி எக்ஸ்பிரஸ் எனப்படும் ரயில் இயக்கப்பட்டது. மெட்ராஸ் சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் இயக்கப்பட்ட புகழ்பெற்ற இந்த ரயிலில் முதல்முறையாக முதல்வகுப்பு பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, 1908 முதல் 1929-ம் ஆண்டு வரைக்கும் மெட்ராஸ் சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே 'மேட்டுப்பாளையம் மெயில்' என்ற ரயில்சேவை வழங்கப்பட்டு வந்தது. 

இதைத் தொடர்ந்து, நாள்தோறும் அடிப்படையில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான 3-ம் வகுப்பு பெட்டிகளைக் கொண்டு புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை இயக்கப்பட்டது. இதேபோல, மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மீட்டர் பாதை ரயில்சேவை புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது. ஆனால், 1970-ம் ஆண்டிற்கு பிறகு மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான புளு மவுண்டயின் எக்ஸ்பிரஸின் மீட்டர் பாதை ரயில்சேவை நிறுத்தப்பட்டு, பயணிகள் சேவை வழங்கப்பட்டது. 

மெட்ராஸில் இருந்து அகல இருப்புப் பாதை வழியாக மேட்டுப்பாளையம் வரும் ரயில்களில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் ஈரோட்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுத்தங்களில் இறங்குபவர்களுக்கு முன்பதிவு செய்ய முடியாது. அதேவேளையில், 3-ம் வகுப்பு பயணிகளுக்கு மேட்டுப்பாளையம் வரையிலும் முன்பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மீட்டர் பாதையில் இயக்கப்படும் ரயிலில் 3-ம் வகுப்பு பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சிறிதளவு மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 

அதிவேக சொகுசு ரயில் : சென்னையில் இருந்து இரவு 09.15 மணிக்கு புறப்படும். மேட்டுப்பாளையத்திற்கு மறுநாள் காலை 08.35 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 09.20 மணிக்கு உதகை புறப்படுகிறது. நண்பகல் 12.36 மணியளவில் உதகை சென்றடைகிறது. 

அதிவேக சொகுசு ரயில் (சென்னை மார்க்கமாக) : உதகையில் இருந்து பிற்பகல் 02.20 மணிக்கு புறப்படும். மேட்டுப்பாளையத்திற்கு மாலை 05.15 மணிக்கு வந்தடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 06.10 மணிக்கு சென்னைக்கு புறப்படும். மறுநாள் காலை 06.35 மணியளவில் சென்னை சென்றடையும். 

நீலகிரியின் முக்கிய ரயில்சேவையாக இருக்கும் இந்த ரயிலானது, 9 குளிர்சாதனப் பெட்டிகளோடு இயக்கப்படும் ஒரே ரயிலாகும். இந்த ரயில் சென்னையில் உள்ள கோச்சிங் யார்டில் பராமரிக்கப்படுகிறது. மிகவும் பழமையான இந்த ரயில் எலக்ட்டிரிக் என்ஜின்கள், ஈரோட்டில் உள்ள எலக்ட்ரிக் என்ஜின் தயாரிப்பு பணிமனையில் இருந்து எடுத்து வரப்படுகிறது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...