நாமக்கல்லில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி அணிவித்து, மாலை போடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் : நாமக்கல்லில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி அணிவித்து, மாலை போடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் பிரதான சாலையில் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தெரு சந்திப்பில் அ.தி.மு.க சார்பில் 1984-ம் ஆண்டு பெரியார் சிலையும், 1993-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சிலையும், 1994-ம் ஆண்டு அண்ணா சிலையும் மார்பளவில் அமைக்கப்பட்டது. இச்சிலைகளை நாமக்கல் நகர அ.தி.மு.கவினர் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில், இச்சிலைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் கழுத்து பகுதியில் பொன்னாடை போல காவி நிற துணியை அணிவித்து மலர் மாலையும் அணிவித்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்து வந்த போலீசார் உடனடியாக காவி துணிகளை அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, சிலைகளுக்கு காவி துணிகளை அணிவித்தவர்கள் யார் என்பது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.