தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவிற்கு குறி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்கிறாரோ, அதையே ஆந்திராவிலும் செய்ய முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்கிறாரோ, அதையே ஆந்திராவிலும் செய்ய முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 

ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் தெலுங்கு தேசக் கட்சி அண்மையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசியில் வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதனையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயற்சிக்கிறார். ஆந்திர மாநிலத்திற்கு என்ன சலுகைகள் வழங்க முடியுமோ, அதனை வழங்கவே தாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாணையும் வைத்து தங்களுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது. சமீபத்தில், உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இடைத்தேர்தலில் பா.ஜ.க., தோல்வி அடைந்தது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...