உடுமலை சங்கர் : கொட்டும் மழையில் முழங்கிய போராளிகள்

சாதிய ஆணவ கொலையால் படுகொலை செய்யப்பட உடுமலை சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று முன்தினம் உடுமலையில் பறை இசை முழங்க நடைபெற்றது.


கோவை: சாதிய ஆணவ கொலையால் படுகொலை செய்யப்பட உடுமலை சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று முன்தினம் உடுமலையில் பறை இசை முழங்க நடைபெற்றது.

கொட்டும் மழையின் போது இடி முழக்கங்கள் வானில் இல்லை. ஆனால், பெண்ணுரிமையும், ஆணவக் கொலைகளுக்கெதிரான குரல்களும் நினைவேந்தல் மைதானத்தில் இடியாய் ஒலித்தது. இது நினைவேந்தல் நிகழ்வா இல்லை அல்லது சாதி ஒழிப்பின் புது களமா என்ற வகையில் பார்ப்போரை பிரமிக்க வைத்தது.



பெரிய கூட்டம் என்று சொல்லி விட முடியாது. ஆனால், மேடையில் வைக்கப்பட்ட பதிவுகள் சமூகம் செலுத்தும் ஆணவங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் அமைந்தது. இந்த நிகழ்வில், பெண்ணுரிமைக்கான குரல்களை பெரியாரின் கருத்தியலோடும், அம்பேத்கரின் சாதி ஒழிப்போடும் கலந்து வெளிப்படுத்தினர் பெரும்பாலான ஆண்கள். 

வீர மங்கையர்கள்







கௌசல்யா-வை போல் போர் குணம் கொண்ட பெண்களை நினைவேந்தல் மேடையில் பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டினர். தன் பிள்ளையான பேரறிவாளனை கூண்டில் இருந்து வெளியேற்றத் துடிக்கும் வயது முதிர்ந்த தாய் அற்புதம்மாளின் அற்புத பேச்சை கண்டவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. 



மழையிலும் அலையாக பாய்ந்த வளர்மதியின் குரல்கள் கூட்டத்தை கலைக்காமல் ஒருங்கிணைத்தது. கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு வளர்மதியின் குரல்கள் புது உத்வேகத்தைக் கொடுத்தது.



சாதி ஒழிப்பை வென்றெடுக்க, சமூக நீதியை காப்பாற்ற, சமத்துவம் படைக்க நாம் காணும் காலத்தில் களம் வென்ற வீர பெண் கௌசல்யாவின் கணவர் சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் சங்கர் அறக்கட்டளை அறிமுக விழாவும் நடைபெற்றது. துவக்கத்தில் முழங்கிய பறையொலி மெல்ல மெல்ல மழைச்சாரலில் பறை முழக்கமாக வெடிக்க துவங்கியது.

அரசியல் பேச்சுக்கள் 







நினைவேந்தலுக்கு வந்த தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் சமத்துவ களம் உருவாக்கத் துடித்தது. அது சமூக நீதிக்கான புதிய உத்வேகத்தை அளித்தது. ஜி.ராமகிருஷ்ணன் உரைத்த பெண்ணியம் பெண்களின் போர் குணத்தை பறை சாற்றியது. 



நல்லகண்ணு-வின் சொற்பமான வார்த்தைகள் உண்மையை உரக்க கூறியதாக கூட்டத்தில் இருந்தவர்கள் கர கோஷத்தோடு எழுப்பினர். மூத்த தலைவரான இவர் நினைவேந்தலுக்கு வந்தது கூட்டத்திற்கு மேலும் ஒரு சிறப்பை சேர்த்தது. 



அறம் பட இயக்குநர் கோபி நயினார், சாதி ஒழிப்பில் சினிமாவை கலந்து பெண்ணின் பெருமையை உயர்த்திப் பேசினார். கௌசல்யாவின் தன்னம்பிக்கையையும் அவரது செயல்பாடுகளையும் பெருமைப்படுத்தினார் அவர். 



கொளத்தூர் மணி தனக்கே உண்டான பாணியில் பெரியாரின் பகுத்தறி பேச்சுடன் சாதி ஒழிப்பு களத்தை பெருமைப்படுத்தும் வகையில் முழங்கினார்.



பெண்ணியத்தை பெருமைப்படுத்திப் பேசிய திருமுருகன் காந்தி ஆண்களை தரம் தாழ்த்தி விமர்சித்தது கூட்டத்தினரின் முகங்களில் சலிப்பை ஏற்படுத்தியது.



சமுத்திரகணியின் பேச்சுக்காக கூடியிருந்த கூட்டமும் அவரின் பேச்சை கண்டு மெய் சிலிர்த்தது. அவர், இயக்குநர் அமீரின் கடிதத்தை படித்த போது ஆர்ப்பரிக்கும் ஓசை விண்ணை முட்டியது. 

சமூகத்தால் விரட்டப்பட்ட பெண் ஒருவர், முட்டி முளைத்து சிறகை விரித்து பறக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு பாரதியையும், பெரியாரையும், அம்பேத்கரையும் பெருமைப்படுத்தும் நிகழ்வாகவே அமைந்தது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...