அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற 7 மடங்கு நிதி ஒதுக்கீடு

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையிலான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஆண்டு பட்ஜெட்டை காட்டிலும், நடப்பாண்டில் 7 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையிலான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஆண்டு பட்ஜெட்டை காட்டிலும், நடப்பாண்டில் 7 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

பவானி ஆற்றிலிருந்து 2,000 கனஅடி உபரி நீரை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்பி, நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகியவற்றிற்காக கொண்டுவரப்பட்டது அத்திக்கடவு - அவினாசி திட்டமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி தமிழக அரசிடம் 1957ஆம் ஆண்டு முதல்முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

61 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். 

இதன் விளைவாக, அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என கடந்த 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது அப்போதைய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தை ரூ. 1,862 கோடி செலவில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை 2011 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறினார். 

இதையடுத்து, கடந்த 2017-18-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த பட்ஜெட்டில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போதைய நிதியாண்டில் (2018-2019) தமிழக பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 1,789 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் நீர்பாசனத்திற்காக ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், கடந்த ஆண்டை விட அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு 7 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், தமிழக அரசின் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டம் முழுமையடையாதது வருத்தம் அளிக்கக் கூடியதாகவே உள்ளது. எனவே, தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றி தங்களது வாழ்வாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்பது கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் கோரிக்கையாக உள்ளது. 

அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேறும் போது இப்பகுதிகளில் வாழும் 35 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படும். மேலும், 1.30 இலட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...