மேட்டுப்பாளையத்தில் பாதுகாப்பின்றி திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் விபத்திற்குள்ளான பேருந்துகளால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் பாதுகாப்பின்றி திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் விபத்திற்குள்ளான பேருந்துகளால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, ஊட்டி, குன்னூர், கூடலூர், திருப்பூர், ஈரோடு என பல்வேறு பகுதிகளுக்கும் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு சாலை விபத்துக்களால் சேதமாகி இனி இயக்கவே இயலாது என்ற நிலையில் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன.
அவ்வாறான வாகனங்களை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் குட்டையூர் என்னும் கிராமத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத திறந்த வெளியில் எவ்வித பாதுகாப்போ கண்காணிப்போ இல்லாமல் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கவனிப்பார் யாருமின்றி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் முக்கிய உதிரி பாகங்கள் சமூக விரோதிகளால் எளிதில் திருடப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், வெயிலின் தாக்கத்தால் காய்ந்து கிடக்கும் புற்களின் இடையே பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளில் இருந்து டீசல் கலந்த என்ஜின் ஆயில் வெளியாகி வருவதாகவும் இதனால் எந்த நேரமும் தீப்பிடிக்கும் அபாயமும் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, "விபத்துக்களால் இயக்க முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை ஏலம் விட முறைப்படி டெண்டர் கோரியுள்ளோம். அதுவரை அவற்றை நிறுத்த பணிமனையில் போதிய இடமில்லாத காரணத்தினால் அங்கே நிறுத்தியுள்ளோம். வாகன உதிரி பாகங்கள் திருட்டோ அல்லது தீவிபத்து சம்பவங்களோ நடக்காத வகையில் தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்." என்றனர்.