நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி அப்பகுதி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி அப்பகுதி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குந்தா தாலூக்காவின் மிக முக்கிய வியாபார ஸ்தலமாக இருப்பது மஞ்சூர். இப்பகுதியைச் சுற்றி 30,000 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்ற தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்டத்தின் பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபான கடைகள் அகற்றப்பட்டன.
குறிப்பாக மஞ்சூர் பகுதியில் இருந்த இரண்டு மதுபான கடைகளும் அகற்றப்பட்டன. இதனால், இப்பகுதியில் இருப்பவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று மது பானங்களை வாங்கி வரும் நிலை ஏற்பட்டது. மேலும், இப்பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரிக்கு, அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு மது பானங்கள் கிடைக்காததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா விடுதிகள் நடத்தி வருபவர்கள் மற்றும் உணவு விடுதி நடத்தி வருபவர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.