மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் சேவைக்கு பண் மடங்கு கட்டண உயர்த்தப்பட்டுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் சேவைக்கு பண் மடங்கு கட்டண உயர்த்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையினை ஏற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு கோடைக்கால சிறப்பு மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பெரிதும் விரும்பிப் பயணிக்கும் இம்மலை ரயில் சேவையினை கோடைக்காலத்தில் கூடுதலாக இயக்க வேண்டும் என நீலகிரி மலை ரயில் ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து வரும் மார்ச் 31 முதல் ஜூன் 24 வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கோடைக்கால சிறப்பு மலை ரயில் பாரம்பரிய முறையில் நீராவி என்ஜின் மூலம் மூன்று பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு 12.30 மணிக்கு குன்னூரை சென்றடையும் அதேபோல மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் அதன் கட்டன உயர்வைக் கண்டு விழிபிதுங்கி நிற்கின்றனர். மூன்று பெட்டிகளுடன் மட்டும் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் பெரியவர்களுக்கு ரூ.1,100, ஐந்து முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள சிறியவர்களுக்கு ரூ.650, இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.800 சிறியவர்களுக்கு ரூபாய் 500 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கட்டணத்தை விட பண்மடங்கு என்று உயர்த்தப்பட்டுள்ளது.
இது பணம் படைத்தவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் தெரிவிக்கும் பொதுமக்கள், ஏழை எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் அறிவித்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள இந்த மலை ரயிலுக்கான கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்திவைக்கப்பட்ட சிறப்பு மலை ரயில் சேவை இந்த கோடை சீசனுக்கு மீண்டும் இயக்கப்பட்டாலும், இந்த அதிரடி கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலக்கமடைந்துள்ளனர்.