கோவையில் ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தில் பண்ணையைச் சுற்றி மின்வேலி அமைத்த விவசாயி மீது வனப்பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கோவை: கோவையில் ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தில் பண்ணையைச் சுற்றி மின்வேலி அமைத்த விவசாயி மீது வனப்பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட மத்திபாளையம் பகுதியில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான பண்ணை ஒன்று உள்ளது. அந்த பண்ணையில் சூரிய ஒளியில் இயங்கும் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் பண்ணைக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக அந்த மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த யானையை உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.

யானை உயிரிழப்புக்குக் காரணமான பண்ணை உரிமையாளர் சந்திரன் மீது வனப்பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சந்திரன் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.