பூட்டிக் கிடக்கும் கோத்தகிரி நேரு பூங்கா: அதிருப்தியில் சுற்றுலா பயணிகள்

கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் எவ்வித பணிகளும் துவக்கப்படாமல் பூட்டப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் எவ்வித பணிகளும் துவக்கப்படாமல் பூட்டப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்குவது வழக்கம். இந்த சீசனில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகை புரிவார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உலக புகழ் பெற்ற 122-வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற இருக்கும் இந்த மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோத்தகிரி நேரு பூங்காவில் வரும் மே மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளில் 10-வது காய்கறி கண்காட்சி தொடங்க உள்ளது. ஆனால், இதற்கான ஏற்பாடுகள் செய்வதில் தோட்டக்கலைத் துறை நிர்வாகம் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருகிறது. 

குறிப்பாக பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள், பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் போன்றவை தொடங்காமல் உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதியில்லாமல் பூங்கா பூட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.



எனவே, தோட்டக்கலைத் துறை நிர்வாகம் கோத்தகிரி நேரு பூங்காவை பொலிவுபடுத்தி பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...