கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஒரு மாதமே ஆன யானைக் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்
கோவை: கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஒரு மாதமே ஆன யானைக் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் தடாகம் அனுபாவி சுப்ரமணியர் கோவில் பகுதியில் 2 குட்டிகளுடன் 5 யானைகள் கொண்ட கூட்டம் வந்தது. அந்த யானை கூட்டத்தில் பிறந்து 1 மாதம் ஆன ஆண் யானை குட்டி ஒன்று இருந்தது. அப்போது, அந்த குட்டி யானை லலிதாம்பிகை கோவில் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டது.
இது தொடர்பாக, வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அந்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர், தண்ணீர் தொட்டியை உடைத்து அந்த குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, குட்டி யானை அதன் தாயுடன் வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.