ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், இந்த வழக்கில் சி.பி.ஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் இதுதொடர்பாக சி.பி.ஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர். பேரறிவாளன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ, மனுதாரர் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெறக் கோரி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையை மீண்டும் நடத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேட்டரி வாங்கி கொடுத்ததை விட கொலைச்சதியில் பேரறிவாளனுக்குப் பங்கு உள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார். அரசின் வாதத்தை ஆட்சேபிக்க மனுதாரருக்கு (பேரறிவாளன்) ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் குற்றவாளி இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், இது தொடர்பாக 4 வாரத்தில் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.