குரங்கணி காட்டுத்தீ குறித்து விசாரிக்க அதுல்ய மிஸ்ரா நியமனம்

குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க அதுல்ய மிஸ்ராவை தனி அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி : குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க அதுல்ய மிஸ்ராவை தனி அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி வனப்பகுதி. இந்த மலைப்பகுதியில் கடந்த ஞாயிறு அன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதில், சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற 11 பேர் காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அதுல்ய மிஸ்ராவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். காட்டுத்தீ ஏற்பட்டதற்கான பின்னணி உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...