திருப்பூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் 3 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சீரமைத்து, தடைபட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் வழங்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் 3 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சீரமைத்து, தடைபட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் வழங்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஆலாங்காடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், மின் இணைப்பு இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் மிகவும் பழுதடைந்த நிலையில், இருந்த மூன்று மின் கம்பங்களையும் மாற்றக் கோரி மின்சார வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை மனுவும் அளித்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அப்போது, இன்னும் இரண்டு நாட்களில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நூறு குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் மறியலில் ஈடுபடப் போவதாக எச்சரித்தனர்.