கத்தியை காட்டி பணம், நகை பறித்த வழக்கில் 6 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: கத்தியை காட்டி பணம், நகை பறித்த வழக்கில் 6 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதி அருகே நண்பனுடன் வந்துக் கொண்டிருந்த நிஜந்தன் என்பவரிடமிருந்து ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கத்தியை காட்டி கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நஞ்சன், ராஜேந்திரன், சூம்பி, முனியப்பன், விஜயன், குண்டு பாலன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.