+1 மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்: பொதுத்தேர்வு எழுதச் சென்றபோது பரிதாபம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் +1 தேர்வு எழுதச் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் +1 தேர்வு எழுதச் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரனேஷ். அரசுப் பள்ளி ஒன்றில் +1 படித்து வருகிறார். பொதுத்தேர்வு நடைபெறுவதால் இவர், தனது நண்பர்களான கவின் மற்றும் கண்ணன் என்பவர்களுடன் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 



தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி பள்ளி மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை கற்களால் அடித்து நொறுக்கினர். மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...