கோவையில் அனுமதியின்றி குழி தோண்டியதால் பி.எஸ்.என்.எல் கேபிள்கள் சேதம்

கோவையில் தனியார் குடியிருப்பு வாசிகள் அனுமதியின்றி குழி தோண்டியதால் சாலையில் பதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப கேபிள்கள் சேதமடைந்தன.

கோவை: கோவையில் தனியார் குடியிருப்பு வாசிகள் அனுமதியின்றி குழி தோண்டியதால் சாலையில் பதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப கேபிள்கள் சேதமடைந்தன. 

நஞ்சுண்டாபுரம் பகுதியில் தனியார் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அங்கிருந்து கழிவுநீரை வெளியேற்றி, சுத்திகரிப்பு தொட்டிக்கு கொண்டு செல்லும் பொருட்டு கடந்த திங்கட்கிழமை சாலையில் குழி தோண்டப்பட்டது.

சாலையின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப கேபிள்கள் சேதமடைந்தன. இதனால், நஞ்சுண்டாபுரம் பகுதியில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது.



நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் சாலையில் குழி தோண்டப்பட்டதாகவும், இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், சேதமடைந்த கேபிள்களை சரிசெய்தனர். மேலும், அனுமதியின்றி குழி தோண்டியவர்கள் மீது புகாரளித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...