அடுத்த மூன்று நாட்களுக்கு கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: அடுத்த மூன்று நாட்களுக்கு கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கோவையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கோவையிலும் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாய்க் கிழமை கோவையின் பல பகுதிகளில் 11 மீ.மீ முதல் 20 மீ.மீ வரை மழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் வானம் மேகமூட்டத்துடனும் தூரல் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
இந்த மழையைப் பயன்படுத்தி அடுத்த அறுவடைக்கு விவசாயிகள் தயாராகலாம். மரங்களுக்கு பாத்தி கட்டுவதன் மூலம் 250 முதல் 300 லிட்டர் வரை நீர் கிடைக்கும். கொய்யா, தென்னை, சப்போட்டா மற்றும் மாம்பழம் போன்ற மரங்கள் பெரிதும் பயன்பெறும்.
வெப்ப நிலையைப் பொறுத்தவரை கோவையில் இரவு நேரங்களில் 22.5 டிகிரி செல்சியஸ் வரையும், பகல் நேரங்களில் 32 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக வாய்ப்புள்ளது. பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாநகரப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.