கோவையை அடுத்த மத்திபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.
கோவை: கோவையை அடுத்த மத்திபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.
மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட மத்திபாளையம் பகுதியில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான பண்ணை ஒன்று உள்ளது. அந்த பண்ணையில் சூரிய ஒளியில் இயங்கும் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் பண்ணைக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக அந்த மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது, வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்ததாக தகவல் விடுத்தும் அதை விரட்ட வனத்துறையினர் கால தாமதமாக வந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கால்நடைத் துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த யானையை உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். யானை உயிரிழப்புக்குக் காரணமான பண்ணை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.