சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்தான் சங்கரின் மறைவுக்கான நீதி என கவுசல்யா தெரிவித்துள்ளார்.

ஆணவக் கொலைக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக உடுமலை சங்கரின் படுகொலை அமைந்தது. இதையடுத்து, சங்கரின் மனைவி கவுசல்யா, சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும், கலப்பு திருமணத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். இதற்காக, சங்கர் சமூக நீதி அறக்கட்டளையையும் அவர் தொடங்கியுள்ளார். அந்த அறக்கட்டளையின் சார்பில் சங்கரின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
இதில், கவுசல்யா பேசியதாவது :- சங்கர் இந்த மண்ணை விட்டுச் சென்றதால், இன்று நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகமாக மாறியிருக்கிறது. நான் என்பது இனி என் லட்சியம் தான்!. சாதி ஒழிக..! தமிழ் வெல்க..! என்கிற முழக்கம்தான். காவல்துறை அன்று சட்டப்படி நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படி ஒரு மேடை அமைத்து அவனுக்கான நினைவேந்தலும், அவன் பெயரில் அறக்கட்டளை தொடக்க விழாவையும் நடத்தவேண்டிய தேவை இருந்திருக்காது.

இதுவரை மற்றவர்கள் நடத்துகிற நிகழ்ச்சியில்தான் நான் பங்கேற்றிருக்கிறேன். இதுதான் நானே முன்னெடுத்து நடத்தும் முதல் நிகழ்வு. தங்களது நிகழ்வுக்கு அனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிப் போதற்கு நான் கோழையல்ல. பெரியாரின் பேத்தி..! சங்கர் சமூக நீதி அறக்கட்டளை தொடங்கியதற்கான காரணத்தை இங்கே வெளியிட்டுள்ள சிறுநூலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். எனக்கென்று சில கொள்கைகள் உள்ளன. அவற்றை உள்வாங்கி கற்றுதான் இவைதான் என் கொள்கைகள் எனத் தீர்மானித்தேன். அது சார்ந்த சில புரிதல்களை இங்கே பகிரத்தான் வேண்டும். கருத்து வேறுபாடுகள் இங்கே கூடியிருக்கிற நமக்குள் இருக்கலாம். இலக்கு வேறுபாடு இருக்காது என உறுதியாக நம்புகிறேன்.
சாதி ஒழிப்பிற்கு உழைப்பவர்கள் தமிழ், தமிழ்நாட்டின் பிற உயிராதாரமான உரிமைகளுக்கு உழைத்தவர்களை புறம் தள்ளுவதும், தமிழக உரிமைக்கு உழைப்பவர்கள் சாதி ஒழிப்பிற்கும், சமூக நீதிக்கும் உழைத்தவர்களை புழங்குவதும் எனக்கு வருத்தமளிக்கிறது. இப்படிச் சொல்வதனால் அவருக்கு இதில் அக்கறையில்லை, இவருக்கு அதில் அக்கறையில்லை என்று நான் சொல்வதாகப் பொருள் கொண்டு விட வேண்டாம். ஆனால், நடைமுறையில் பல நேர்வுகளில் நாம் பிளந்து நிற்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. சாதி ஒழிப்புக்கு தமிழ், தமிழர் உரிமைக்கான போராட்டங்களே அடிப்படை. அதேபோல் தமிழ்ச் சமூக விடுதலைக்கு சாதி ஒழிப்பே அடிப்படை. இந்த இரண்டு காரியங்களையும் செய்துகொண்டுதானே உள்ளோம் என்று நீங்கள் சொல்லலாம்.
சாதி ஒழிப்பும், தமிழ் விடுதலை எனும் தமிழ்ச் சமூக விடுதலையும் நேர்கோட்டில் நிற்கிற உயிர்க் கொள்கைகளாக மாற வேண்டும் என விரும்புகிறேன். அப்படி இருந்தால்தான் அது சாதி ஒழிப்பிற்கும் பயன்தரும், விடுதலைக்கும் பயன்தரும் என நம்புகிறேன். அப்படிப்பட்ட கருத்தியல் பெற்ற ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இளம் தலைமுறை என்றால் அதில் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். என் தலைமுறையை சாதி ஒழிக, தமிழ் வெல்க என்ற கொள்கை அடிப்படையில் உருவாக்க நான் என்னை ஒப்புக்கொடுத்து உழைப்பேன் என இந்த நாளில் சங்கரின் பெயரால் உறுதி அளிக்கிறேன்.
நான் அறிவித்துக் கொண்ட இந்த நோக்கங்களுக்காகப் பொறுமையாகவும், நிதானமாகவும் என் வாழ்நாள் முழுக்கப் பங்களிப்பேன். என்னோடு இந்தப் பணியில் இணைய என் சக நண்பர்களை உரிமையோடு அழைக்கிறேன். ஒன்று மட்டும் உறுதி நண்பர்களே புகழுக்கும் பதவிக்கும் சமரசத்துக்கும் அதிகார நெருக்கத்துக்கும் இங்கே இடமில்லை. சட்டத்திற்கு உட்பட்டும் சனநாயகத்திற்கு உட்பட்டும், அறவழியில் மக்களுக்காக தொண்டுள்ளதோடும் பாட்டாளி உணர்வோடும் நாம் உழைக்க வேண்டும். இறுதியிலும் இறுதியாகப் பசியற்ற சுரண்டலற்ற எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் அற்ற பாட்டாளிகள் சமூகத்தை இந்த தமிழ் நிலத்தில் உருவாக்க வேண்டும். அதற்குக்கூட சாதி ஒழிக! தமிழ் வெல்க! எனும் முழக்கமே அதன் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன். அப்படி ஒரு பொன்னுலகைப் படைக்க என் சிறு பங்களிப்பை வாழ்நாள் முழுக்கச் செய்யக் காரணமான சங்கரை உடன் அழைத்துப் பயணிப்பேன்.
சங்கர் நினைவேந்தலில் எல்லாவற்றையும்விட நாம் ஒன்றை பேசக் கடமைப்பட்டிருக்கிறோம். அது ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்! சங்கரின் நினைவேந்தல் நாளில் மட்டுமல்ல மற்ற எல்லாக் காலங்களிலும் இந்தத் தனிச்சட்டத்திற்காக நாம் உழைத்தாக வேண்டும். சாதிய ஆணவப் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி! நம் இலக்கு வெல்ல ஒன்றுபடுவோம். இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பு விருந்தினர்களுக்கு கவுசல்யா பரிசுகளை வழங்கினார்.