தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொள்ள தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
கோவை: தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொள்ள தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கு வரும் 14-ம் தேதி காலை 10.00 மணியளவில் அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் நிறுவன மையம், சிறப்பு பிரிவினரை ஊக்குவிக்கும் ஒரு அருமையான சுற்றுச்சூழலை உருவாக்கித் தருகிறது.
இந்த மையத்தின் மூலம் சிறப்பு பிரிவினரின் தொழில் திறன் மேம்படுத்தப்பட்டு, பொது கொள்முதல் செயல்முறைகளில் திறம்பட பங்கேற்க உதவுகிறது. எனவே, இந்த பயிற்சி கூட்டரங்கில் கலந்து கொண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தொழில்களைத் துவங்கி, அரசு திட்டங்களின் வாயிலாக பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.