வறண்டு வரும் நீராதாரங்கள் : நீர் நிலைகளைத் தேடும் பறவைகள்

மேட்டுப்பாளையம் பகுதிகளில் வறண்டு வரும் நீராதாரங்களால் பறவையினங்கள் நீர் நிலைகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் வறண்டு வரும் நீராதாரங்களால் பறவையினங்கள் நீர் நிலைகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 525 பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பல வகை பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்து தங்கிச் செல்கின்றன. 

மேட்டுப்பாளையத்தில் உள்ள பசுமை சூழ்ந்த காட்டாற்று படுகைகள், நீர் தேக்கங்கள் மற்றும் குட்டைகளில் இவை ஆயிரக்கணக்கில் காணப்படும். குறிப்பாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு கழகத்தால் (ஐ.யு.சி.என்) அழிவு நிலையில் உள்ள பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள 'பாம்புதாரா' என்னும் நீர்ப்பறவைகளை இப்பகுதியில் காணலாம். பாம்பு போல் வளைந்து நெளிந்து காணப்படும் நீண்ட கழுத்தை கொண்ட பாம்புதாரா பறவைகள் மீன்களை உணவாகக் கொள்ளும். இதே போல் நீர் காக்கைகள், கொக்குகள், நாரைகள், அருவாமூக்கன் போன்ற உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி பல்வேறு அரிய வகை வெளிநாட்டு பறவையினங்களையும் இங்கு காண இயலும். 

ஆனால், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாமல் பொய்த்துப் போனதால் பல்லாண்டுகளாக பறவைகளை ஈர்த்த பல்வேறு நீர்நிலைகள் தற்போது வறண்டு கிடக்கின்றன. இதனால், தற்போது ஓரளவு நீருடன் காணப்படும் லிங்காபுரம் நீர்த்தேக்க பகுதி மற்றும் பெள்ளாதி குட்டை போன்ற இடங்களுக்கு பறவைகள் படையெடுக்கின்றன. ஏராளமான பறவைகள் அந்த நீர் நிலைகளில் இருக்கும் குறைந்த நீரில் உணவைத் தேடுகின்றன. விரைவில் கோடை மழை பெய்யாவிட்டால் இந்த நீராதாரங்களும் வறண்டு பறவைகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.​

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...