மக்கள் நீதி மய்யத்தில் இணைக்க தனக்கும் மின்னஞ்சல் வந்ததாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: மக்கள் நீதி மய்யத்தில் இணைக்க தனக்கும் மின்னஞ்சல் வந்ததாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க.வின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதாக நடிகர் கமலஹாசன் கிடைக்கும் மின்னஞ்சலுக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். அந்த கட்சியில் இருந்து எனக்கும் அழைப்பு மின்னஞ்சல் வந்தது வேடிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது உண்மைதான். ஆனால், அதனை நடிகர்களால் நிரப்ப முடியாது. 22 மாநிலங்களில் ஆளுகின்ற பா.ஜ.க. மட்டுமே தமிழகத்தின் மாற்றாக அமைய முடியும். தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார். திரைப்படத்துறை தற்போது முடங்கியுள்ள நிலையில் அவற்றை மீட்டு வர முடியாதவர்கள் எப்படி தமிழகத்தை மீட்கப் போகிறார்கள்.
தேனியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டது. அதனையும் தமிழகத்தில் சில கட்சிகள் விமர்சிப்பது வேதனையளிக்கிறது. இலங்கையில் தமிழின மக்கள் கொல்லப்பட்ட போது வராத ராகுல்காந்தி தற்போது அரசியலுக்காக ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக நாடகமாடுகின்றார்." என்று அவர் பேசினார்.