ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - ஜவாஹிருல்லா

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 161 பிரிவின் கீழ் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.


கோவை: இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 161 பிரிவின் கீழ் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

கோவை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிகளை சந்திக்க மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா இன்று கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், விடுதலையை எதிர்பார்த்து இருந்த நிலையில் ரிஸ்வான் என்பவர் நேற்று முன் தினம் மரணமடைந்தார். இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ரிஸ்வானின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கி அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவை மத்திய சிறையில் இரண்டு பேர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளனர். மேலும், இருவர் மன உளைச்சல் காரணமாக மரணித்துள்ளனர். மத்திய சிறையில் கைதிகளுக்கு தரமான மருத்துவ வசதி மட்டுமல்லாமல் கைதிகள் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்க உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப் பட வேண்டும். குற்றவாளிகள் எந்த வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் என்பதை கடந்து பாரபட்சம் பாராமல் விடுதலை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...