உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது
நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க அம்மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், உதகையில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை சீசனை வரவேற்கும் வகையில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் சென்று விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பூங்கா வளாகத்தில் உள்ள இந்திய வரை படம் அருகே பல்வேறு மலர்கள் அடங்கிய மலர் தொட்டிகள் அடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நின்று சுற்றுலாப்பயணிகள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.