தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தகவல் தெரிவித்துள்ளார்.
தேனி : தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தகவல் தெரிவித்துள்ளார்.
போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மலையேறச் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி கொண்டதாகவும், இந்தக் காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை. பலியானவர்களில் 6 பேர் பெண்கள். காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 3 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.