கோவை மாநகராட்சியின் 72-வது வார்டு பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : கோவை மாநகராட்சியின் 72-வது வார்டு பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சிக்குட்பட்ட 72-வது வார்டில் உள்ள காளியப்ப நகர் பகுதியில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குழாயில் இருந்து நீர் வெளியேறி சாலைகளில் தேங்கி வீணாகிறது. மேலும், சாலை கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும் என்பதால், குடிநீரை சிக்கனமாகவும், வீணடிக்காமலும் பயன்படுத்துமாறு அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காளியப்ப நகர் பகுதியில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாகியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.