திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறக்கப்பட்டது.
இந்த விழாவிற்கு மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் எஸ்.தமிழ்வாணன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இதில், மாவட்ட காவல் ஆணையர் பி. நாகராஜன், கோவை மாவட்ட நீதிமன்ற தலைவர் பாலசந்திரன், திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் எஸ். தமிழ்வாணன் கூறுகையில், " தமிழகத்தில் 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் போது உள்ள குறைபாடு, அதன் தரம், எம்.ஆர்.பி.ரேட், காலாவதி தேதி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளன. சமையல் எரிவாயு, எலக்டிரிசிட்டி, ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்தும் உள்ளடங்கும். இழப்பீடு 1986-ம் ஆண்டு சட்டத்தின்படி மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரையிலும், அதற்கு மேல் ரூ. 1 கோடி வரை மாநில நீதிமன்றத்திற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நுகர்வோர் நீதிமன்றங்கள் இருப்பது நியாயங்கள், நீதி வழங்குவதற்காகத் தான் செயல்படுகின்றது." எனத் தெரிவித்தார்.