கோவையில் சாலையோரம் நிருத்தப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கோவை: கோவையில் சாலையோரம் நிருத்தப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழிக்கறிஞராக பணியாற்றிய வருபவர் ராஜேஸ்வரி. இன்று மதியம் 12.30 மணியளவில் ரெட் பீல்ட்ஸ் அருகே தனக்கு சொந்தமான காரை நிறுத்தி விட்டு நீதி மன்றத்திற்கு சென்றார்.
அப்போது, அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்.
மக்கள் அதிக நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், பந்தய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.