தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் கோவையைச் சேர்ந்த விபின் தாமோதரன் என்பது தெரிய வந்துள்ளது.
தேனி: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் கோவையைச் சேர்ந்த விபின் தாமோதரன் என்பது தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற முப்பதுக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் கோவையை சேர்ந்த விபின் தாமோதரன் என்பவரும் பலியானார். இவர், மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்ல ஆர்வமுடையவர் என்பதும், தற்போதைய டிரெக்கிங் நிகழ்வை விபின் தாமோதரனும், அருண் பிரபாகரன் என்பவரும் ஒருங்கிணைத்ததுள்ளனர்.

தீ விபத்தில் இருந்து தப்பித்த இவர்கள் இருவரும் மற்றவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போதே பலியானார்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களின் பெயர் , விவரம், மற்றும் காயத்தில் அளவு ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களைப் பெற ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 94450-00586, 9994793321 இந்த எண்களுக்குத் தொடர்பு கொண்டு மேலும் தகவலை பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது