தேனி: தேனி மாவட்ட வனப்பகுதிக்குள் டிரக்கிங் சென்ற கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கி போராடி வருகின்றனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணிக்கு திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 40 பேர் டிரக்கிங் சென்றனர்.
இந்த நிலையில், வனப்பகுதிக்குள் இன்று திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது இந்த தீ மளமளவென வனம் முழுவதும் பரவியது.
இதனால், டிரெக்கிங் சென்ற மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கி போராடினர்.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலின் பேரில் தீயணைப்பு வாகனம் மற்றும் வனப் பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடுமையான போராட்டத்திற்கு பிறகு 12 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
இந்த தகவலறிந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், கோவை மாவட்டம் சூலூர் விமான படைதளத்தில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்களை மீட்பு பணிக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
அதன்பேரில், சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்காக சென்றது. அதில் 20 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் உள்ளனர். மேலும், தண்ணீர் டேங்குகள், கயிறு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் தீயில் இறங்கி மீட்புப் பணியை மேற்கொள்ளத்தக்க உடைகள் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.