கோவை மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர்

கோவையில் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவை : கோவையில் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கடந்த மாதம் 24-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். 

கோவை மாவட்டத்தில் இருந்து இந்த மானிய விலை இருசக்கர வாகனத்தைப் பெற 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 3,940 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கினார். முதற்கட்டமாக, கோவையில் ஒரு திருநங்கை உள்பட145 பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "அனைத்து மகளிரும் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஒட்ட வேண்டும். தமிழகத்தில் 6.30 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உள்ளது. 95 லட்சம் பேர் குழுக்களில் உள்ளனர். இவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கடன் வழங்கி உள்ளனர். என்னுடைய துறையின் கீழ் சுய உதவிக் குழுக்கள் உள்ளது. எனவே பெண்கள் எந்தத் தொழில் துவங்குவதாக இருந்தாலும் அணுகலாம்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...