கோவையில் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
கோவை : கோவையில் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
கடந்த மாதம் 24-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் இருந்து இந்த மானிய விலை இருசக்கர வாகனத்தைப் பெற 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 3,940 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கினார். முதற்கட்டமாக, கோவையில் ஒரு திருநங்கை உள்பட145 பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "அனைத்து மகளிரும் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஒட்ட வேண்டும். தமிழகத்தில் 6.30 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உள்ளது. 95 லட்சம் பேர் குழுக்களில் உள்ளனர். இவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கடன் வழங்கி உள்ளனர். என்னுடைய துறையின் கீழ் சுய உதவிக் குழுக்கள் உள்ளது. எனவே பெண்கள் எந்தத் தொழில் துவங்குவதாக இருந்தாலும் அணுகலாம்." என்றார்.