உதகையில் மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கினார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆணையை உதகையில் இன்று அமைச்சர் எச்.பி.வேலுமணி வழங்கினார்.

நீலகிரி: மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆணையை உதகையில் இன்று அமைச்சர் எச்.பி.வேலுமணி வழங்கினார்.

தமிழக அரசின் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று நீலகிரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் வழங்கும் விழா உதகையில் உள்ள பழங்குடியினர் கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி 154 பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வழங்கினார். 



தொடர்ந்து அவர் பேசுகையில், “நீலகிரி மாவட்டத்தில் 1074 பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனத்திற்கான மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 154 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உதகை அருகேயுள்ள கேத்தி பிரகாஷபுரத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.18.86 கோடி செலவில் 127 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது. கேத்தி பகுதியில் ரூ.19.71 கோடி மதிப்பில் 150 குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில், 3650 வீடுகள் ரூ.113.47 கோடி மதிப்பில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது தொடர்ந்து கேத்தி பிரகாஷபுரத்திற்கு சென்ற அவர், குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினர். 

பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலின் போது அறிவித்த இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் இன்று (நேற்று) துவக்கி வைக்கப்பட்டது. வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் 100 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 110 விதியின் கீழ் அறிவித்த அனைத்து திட்டங்களும் உள்ளாட்சி துறை சார்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்க கூடிய திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு இந்தியாவில் முதன் மாநிலமாக உள்ளது. இந்தியாவில் குழாய்கள் மூலம் அனைத்து குடியிருப்புகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதிலும் தமிழகம் தான் முதல் மாநிலமாக உள்ளது. மகளிர் குழுக்களுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத திட்டங்கள் கூட தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

வறட்சி காலங்களில் கூட குடிநீர் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடுபட்டார். 

தொடர்ந்து, தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எம்பி.,கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஊட்டி மத்திய பஸ் நிலையம் விரைவில் சீரமைக்கப்படும். பெரியார் தமிழகத்தின் தந்தை. அவரை பற்றி யாரும் விமர்சிக்க கூடாது, என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...