நல்ல தமிழகம் அமைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஈரோட்டில் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: நல்ல தமிழகம் அமைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஈரோட்டில் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். சித்தோடு அருகே உள்ள மாமரத்து பாளையம் என்ற பகுதியில் உள்ள சக்தி மசாலா தொண்டு நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தொழிற் பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய கமல், உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன். நல்ல தமிழகம் அமைய வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும். நமக்கான பணிகள் நிறைய இருக்கின்றதால், நாம் அனைவரும் அதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களை பார்க்கும் போது நாளை நமதே என்று நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.