திருப்பூர் மற்றும் ஈரோட்டில் கட்சித்தொண்டர்களையும் நற்பணி மன்ற நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்த கமலஹாசன், விமான தாமதத்தால் அங்கு திரண்டிருந்த ரசிகர்களை சந்திக்காமல் சென்றார்.
கோவை: திருப்பூர் மற்றும் ஈரோட்டில் கட்சித்தொண்டர்களையும் நற்பணி மன்ற நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்த கமலஹாசன், விமான தாமதத்தால் அங்கு திரண்டிருந்த ரசிகர்களை சந்திக்காமல் சென்றார்.
திருப்பூர் மற்றும் ஈரோட்டில் கட்சித்தொண்டர்களையும் நற்பணி மன்ற நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார். கமலஹாசன் வந்த விமானம் அரை மணி நேரமாக தாமதமாக வந்ததால், அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்காமல் செல்வதாக கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
அப்போது, பத்திரிக்கையாளர்களிடம் கமல் பேசுகையில், நான் வந்திருப்பது நற்பணி மன்ற நண்பர்களையும், கட்சி தோழர்களையும் சந்திப்பதற்காகத்தான். இது பொதுக்கூட்டமோ, மாநாடோ அல்ல, நன்றி வணக்கம். இவ்வாறு கூறினார்.

இதனையடுத்து அவர் அவினாசி அத்திக்கடவு திட்ட குழுவினரை சந்திக்க அவினாசி புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் போது, பெருந்துறை, சித்தோடு பகுதிகளில் ரசிகர்கள் மற்றும் கட்சியினரை சந்தித்துவிட்டு , ஈரோட்டில் மாலை கமலஹாசன் தலைமையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இணையும் நிகழ்வில் பேசுகிறார். மேலும், இரவு விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
கமலஹாசன் பேனர் வைப்பதற்கு போலீசார் அனுமதியளிக்காததை அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்தில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் கமலஹாசன் போட்டோ வைத்த பேனர்கள் வைக்கப்பட்டன.
இதேபோல், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியைச் சார்ந்த தலைவர்கள் வந்தால் அவர்களை விமான நிலைய வாயில் அருகே மேளதாளம் முழங்க வரவேற்பது வழக்கம், ஆனால் கமலஹாசன் வருகையையொட்டி பேண்டு மற்றும் ஜமாப்பை நுழைவு வாயில் வெளியில் போலீசார் அடிக்க விடாமல், உள்ளே வந்தவர்களை தூரத்தி, சாலை ஓரத்தில் அடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.