பனியன் நிறுவன உரிமையாளர் ஏமாற்றியதால் மேலாளர் தூக்குபோட்டு தற்கொலை

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் ஏமாற்றி விட்டதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டு நிறுவனத்திலேயே மேலாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் : திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் ஏமாற்றி விட்டதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டு நிறுவனத்திலேயே மேலாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

கொங்கு மெயின் ரோடு, அப்பாச்சி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.என். அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சுதிர். இந்த நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிந்து வருபவர் பழனிநாதன். இந்நிலையில், பழனிநாதனின் பெயரை பயன்படுத்தி பனியன் நிறுவனம் ஒன்றை கூடுதலாக சுதிர் நடத்தி வந்தார். அதில், நஷ்டம் ஏற்படவே வியாபாரம் செய்து வந்தவர்கள் பழனிநாதனிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சுதிரிடம் கேட்ட போது, தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். 

இதனால், மனஉளைச்சலுக்குள்ளான பழனிநாதனை கடன்காரர்கள் மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வடக்கு போலீசில் விநியோகஸ்தகர்கள் புகார் அளித்ததால், போலீசார் வழக்குப் பதியாமல் அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விநியோகஸ்தகர்களின் நெருக்கடி அதிகரிக்கவே இன்று காலை நிறுவனம் வந்த பழனிநாதன், இதுகுறித்த விரிவான கடிதம் எழுதி தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்து விட்டு அங்கேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...