திருப்பூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

திரிபுராவில் எதிர்க்கட்சி தலைவர்களின் சின்னங்கள், அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரைக் கண்டித்து திருப்பூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், திரிபுராவில் நடைபெறும் பா.ஜ.க.வின் மதவெறி ஆட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க., அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.