கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கோவை : கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கன்னியாகுமரியில் கடந்த 6-ம் தேதி பிரான்சிஸ் என்பவரை மர்ம நபர்கள் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கொலையாளிகள் அருள் மற்றும் சுபி ஆகியோர் கோவை ஜெ.எம். 2 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து, நீதிபதி ராஜகுமாரன் இருவரையும் வருகிற 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.