இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவராக கே.எஸ். பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை : இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவராக கே.எஸ். பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு மாநில கவுன்சிலின் (2018-19-ம் ஆண்டுக்கான) நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தலைவராக கே.எஸ். பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 4-வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வான நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.