கல்லூரி வாயிலில் மாணவி கத்தியால் குத்தி கொலை : ஒருதலை காதலால் நிகழ்ந்த வெறிச்செயல்

சென்னையில் ஒருதலை காதலால், கல்லூரி வாயிலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஒருதலை காதலால், கல்லூரி வாயிலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பயின்று வந்தார். இன்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்துள்ளார். அப்போது, இளைஞர் ஒருவர் மாணவியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதைப்பார்த்து அக்கம், பக்கம் உள்ளவர்கள் தடுக்க முயன்றும் சரமாரியாக குத்தியதில், ரத்தவெள்ளத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞர் தப்பி ஓடமுயன்றார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்தவர் செஞ்சியைச் சேர்ந்த அழகேசன் என்பதும், சுகாதார துறையில் பணிபுரிந்து வரும் அவர் மதுரவாயல் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அஸ்வினி அளித்த புகாரின் பேரில் அழகேசனை போலீசார் கைது செய்யப்பட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த அழகேசன் கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. காதல் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டது தொடர்பாக எழும்பூர் வட்டாட்சியர் விசாரணை நடத்தி, அறிக்கை தந்தபின் அரசிடம் சமர்பிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...